Kamarajar History in Tamil PDF

Kamarajar History in Tamil PDF Download

Kamarajar History in Tamil PDF Download for free using the direct download link given at the bottom of this article.

Kamarajar History in Tamil PDF Details
Kamarajar History in Tamil
PDF Name Kamarajar History in Tamil PDF
No. of Pages 66
PDF Size 0.61 MB
Language English
CategoryEnglish
Source pdffile.co.in
Download LinkAvailable ✔
Downloads17

Kamarajar History in Tamil

Dear readers, today we are going to share Kamarajar History in Tamil PDF Download for all of you. காமராஜர் தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்தார். ஜவஹர்லால் நேருவின் மறைவுக்குப் பிறகு காமராஜர் காங்கிரஸின் சக்திவாய்ந்த தலைவராக உருவெடுத்தார். காமராஜர் 1903 ஆம் ஆண்டு ஜூலை 15 ஆம் தேதி தமிழ்நாட்டின் விருதிநகரில் பிறந்தார்.

காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்துவதற்காக காமராஜர் 1963 ஆம் ஆண்டு அக்டோபர் 2 ஆம் தேதி முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். அதன்பிறகு, அப்போதைய பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேருவை தமிழக காங்கிரஸ் தலைவராக நியமிக்க முன்வந்தார். பண்டித ஜவஹர்லால் நேரு அவரது யோசனையை விரும்பி நாடு முழுவதும் செயல்படுத்தினார். இது காமராஜரின் திட்டம் என்று அழைக்கப்படுகிறது.

2019 லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் தோல்வியடைந்த பிறகு, காமராஜர் திட்டம் பற்றிய விவாதம் பொதுவானது. காமராஜர் திட்டத்தால் 6 கேபினட் அமைச்சர்கள் மற்றும் ஆறு முதல்வர்கள் ராஜினாமா செய்ய வேண்டியிருந்தது. கேபினட் அமைச்சர்களில் மொரார்ஜி தேசாய், லால் பகதூர் சாஸ்திரி, பாபு ஜக்ஜீவன் ராம் மற்றும் எஸ்.கே.பாட்டீல் போன்றவர்கள் அடங்குவர்.

Kamarajar History in Tamil PDF Download

திருவனந்தபுரம் சென்ற காமராஜர் : 

ஆனால் காமராஜர் விடுதலை இயக்கத்தில் ஈடுபடுவதை அவரது குடும்பத்தினர் விரும்பவில்லை. எனவே அவரை திருவனந்தபுரத்திற்கு அனுப்பி வைத்தனர். திருவனந்தபுரத்தில் அவரது இன்னொரு தாய்மாமா வைத்திருந்த காய்கறி கடையில் பணிபுரிந்தார் காமராஜர்.

அங்கேயும் அவரது விடுதலை போராட்ட ஈடுபாட்டை காமராஜர் குறைத்துக் கொள்ளவில்லை. கேரளாவில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஆதரவாக நடைபெற்ற வைக்கம் சத்தியாகிரக போராட்டத்திற்கு காந்தியடிகள் வருகை தந்து போராட்டத்தை வெற்றி பெறச் செய்தார். அந்த போராட்டத்தில் காமராஜரும் பங்கு கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

அரசியல் துறவி :

விருதுநகரில் அவரது குடும்பம் மிகவும் வறுமை நிலையில் இருந்ததை அறிந்த காமராஜர் மீண்டும் திருவனந்தபுரத்திலிருந்து விருதுநகருக்கு வந்து சேர்ந்தார். குடும்பத்தினர் அவரை திருமணம் செய்து கொள்ளுமாறு வலியுறுத்தியும், காமராஜர் அதனை முற்றிலுமாக மறுத்துவிட்டார்.

இந்திய நாடு விடுதலை பெறும் வரையில் தான் திருமணம் செய்து கொள்ளப் போவதில்லை என்பதனை அவர்களிடம் தெரிவித்து முழுநேரமாக தேச விடுதலை போராட்டத்திலேயே தன்னை இணைத்துக் கொண்டார். நாட்டிற்கு விடுதலை கிடைத்த பிறகும் கூட அவர் திருமணம் செய்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

விடுதலைப் போராட்டத்தில் காமராஜரின் பங்கு :

  • சென்னை மவுண்ட் ரோடில் இருந்த வெள்ளைக்காரன் நீல் சிலையை அப்புறப்படுத்த ஒரு கிளர்ச்சி நடந்தது.
  • காமராஜர் ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து ஒரு பெரிய தொண்டர் படையைத் திரட்டிக் கொண்டு சென்னை வந்து காந்தியடிகளை சந்தித்தார்.
  • காங்கிரஸ் மாநாட்டில் அந்த சிலையை அகற்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
  • பின்னர் நீல் சிலை அகற்றப்பட்டது.
  • 1930ஆம் ஆண்டு நடந்த வேதாரண்யம் உப்பு சத்தியாகிரகத்தில் காமராஜர் பங்கு வகித்தார்.
  • இதனால் 2 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்தார் காமராஜர்.
  • பின்னர் காந்தி – இர்வின் ஒப்பந்தம் கையெழுத்தானதை தொடர்ந்து அவர் விடுதலை செய்யப்பட்டார்.
  • பிறகு மீண்டும் காமராஜர் கைது செய்யப்பட்டு ஒரு வருடம் சிறையில் அடைக்கப்பட்டார்.

காமராஜரின் பிறப்பு மற்றும் பெயர்க்காரணம் :

காமராஜர் தமிழகத்தின் விருதுநகரில் குமாரசாமி நாடார் மற்றும் சிவகாமி அம்மை என்ற தம்பதிக்கு 1903ஆம் ஆண்டு ஜூலை 15 ஆம் தேதி மகனாய் பிறந்தார். இவர் பிறந்ததும் இவரது தந்தை அவர்களது குலதெய்வத்தின் அருளால் பிறந்த பிள்ளை என்பதனால் அவருடைய குலதெய்வமான “காமாட்சி” என்று பெயர் சூட்டினார்.

அவரது அம்மா அவரை ஆசையாக ராஜா என்று அழைப்பார்கள். இந்த பெயரே நாளடைவில் மருவி காமராஜர் என்றானது.

  • பிறந்தவரின் பெயர் – காமட்ஷி தேதி மற்றும் பிறந்த ஆண்டு – ஜூலை 15, 1903
  • பெற்றோர் – குமாரசாமி நாடார் மற்றும் சிவகாமி அம்மை
  • பிறந்த இடம் – விருதுநகர் [தமிழ்நாடு]
  • மருயா பெயர் – காமராஜர்

கல்வி மற்றும் படிப்பு :

தனது தொடக்க பள்ளி படிப்பை தனது சொந்த ஊரான விருதுநகரில் சத்திரிய வித்யா சாலா என்ற பள்ளியில் பயின்றார். காமராஜர் படிக்கும் போது இருந்தே அவருக்கு விட்டுக்கொடுக்கும் பண்பு மற்றும் அமைதியாக எல்லோருடனும் பேசும் பண்பு போன்ற நல்ல குணங்களை தன்னுள் வைத்திருந்தார்.

இருப்பினும் அவரால் தொடந்து படிக்கமுடியவில்லை. அதன் காரணம் யாதெனில் அவரது பள்ளி படிப்பினை துவங்கிய சிறிது காலத்தில் அவரது தந்தை இறந்து விட்டார் . இதன் காரணமாக அவரது தாய் அவரை மிகவும் கடினப்பட்டு வளர்த்தார்.

தாயின் கஷ்டத்தை உணர்ந்த காமராஜர் தனது படிப்பினை துறந்து தன்னுடைய அம்மாவிற்காக அவரது மாமாவின் துணிக்கடையில் வேலைக்கு சேர்ந்தார்.

You can download Kamarajar History in Tamil PDF using the following download button.


Kamarajar History in Tamil PDF Download Link